வாழ்க்கை என்பது நாம் சாகும் வரை அல்ல .......
மற்றவர் மனதில் வாழும் வரை .......!!!!!!!!

Tuesday, January 25, 2011

“இண்டர்லோக் – INTERLOK – இழிவின் மாற்றுருவம்”


2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் படிவத்திற்கான மலாய்மொழி இலக்கியப்பாட நூல்கள் மாற்றப்பட்டுள்ளன. “இண்டர்லோக்” (INTERLOK) என்னும் தலைப்பில் அமைந்துள்ள நூல் மலாய் இலக்கியப் பாடத்திற்குரிய நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கொண்டு மலாய் இலக்கியப்பாட மாணவர்கள் இந்நூலைப் படித்து ஆய்வு செய்வர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய குறுநாவல் ஒன்று இந்நூலுள் உள்ளது. “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் தலைப்பில் இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இக்குறுநாவல் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது.    
அப்துல்லா உசேன் (Abdullah Hussain) என்பவர் இந்நாவலை எழுதியுள்ளார். அப்துல்லா உசேன் இந்நாட்டின் தேசிய இலக்கியவாதிகளுள் Sasterawan Negara yang kelapan – 1996) ஒருவராவார். இந்நாவல் பல்வேறு வடிவங்களில் தமிழர்களின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ளது. தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகப் பலர் சொல்கின்றனர். தமிழினத்தை ஒட்டுமொத்தமாக இழிவு செய்கின்றது என்னும் கருத்தும் சொல்லப்படுகின்றது.
இண்டர்லோக்கில் உள்ள குறுநாவலால் இந்நாட்டுத் தமிழர்களின் மனம் ஒட்டுமொத்தமாகப் பாதிப்புற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. ஒரே மலேசியா, ஒரே இனம், ஒரே பண்பாடு, ஒற்றுமையே நம் வாழ்வு என்றெல்லாம் ஓதிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் இத்தகைய நாவல் எழுதப்பட வேண்டியதன் தேவையென்ன? இத்தகைய நாவலைப் பள்ளி மாணவர்களுக்குரிய பாடநூலாக்குவதற்கான தேவையென்ன? ஒன்றுமே புரியவில்லை, என்னும் குரல்தான் உரக்க ஒலிக்கின்றது.
சாதியம் தொடர்பான செய்திகள் இந்நாவலுள் விரவியுள்ளன. இஃது இந்நாட்டுத் தமிழர்களை இழிவுபடுத்கின்றதென தமிழ்ச் சார்புடய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், இந்நாவலுள் சாதியம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, பல்வேறு கோணங்களில் தமிழர்களின் வாழ்வியலும் பண்பாட்டுக்கூறுகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குரிய சான்றாக இந்நாவலுள் குறிக்கப்பட்டுள்ள செய்திகள் கீழுள்ளவாறு தொகுக்கப்பட்டுள்ளன:
Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria.  (பக்கம் 211)
மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இவர்கள் அனவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும் பறையர் சாதியச் சேர்ந்தவர்களாகும்.
Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan.  (பக்கம் 211)
யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை.
Mereka berasak-asak seperti kambing . (பக்கம் 211)
ஆடுகளைப்போல முண்டியடித்தனர்.
Disini, pekerjaan yang membezakan kasta tidak ada. (பக்கம் 216)
சாதி வேறுபாட்டை உணர்த்தும் வேலைகள் இங்கில்லை.
Kuli-kuli Cina itulah yang lebih banyak mendapat kesempatan. Maniam mengakui bahawa mereka lebih pantas bekerja dan sedikit bicara. (பக்கம் 218)
சீனக் கூலிகளுக்கு அதிகமான வாய்ப்புக் கிட்டுகின்றது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்வதோடு குறைவாகவும் பேசுகின்றனர் என்பதை மணியம் ஒப்புக் கொண்டான்.
Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya. (பக்கம் 218)
மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.
Dia gembira hidup di negeri ini kerana untuk pertama kali dalam hidupnya dia berasa dirinya sebagai manusia seperti orang lain.  (பக்கம் 218)
தன் வாழ்வில் முதல் முறையாகத் தானொரு மனிதன் என்பதை உணர்ந்ததால் அவன் இந்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். 
Disini dia tidak sahaja bebas bercampur gaul dengan orang lain sama sebangsanya, malah dia tidak takut dengan pantang larang yang terdapat di negaranya apabila seorang India daripada kasta rendah menyentuh orang India daripada kasta tinggi. (பக்கம் 218 – 219)
இங்கு அவன் தன் இனத்தாருடன் சுதந்திரமாகப் பழகுவதோடு தன் நாட்டிலுள்ள சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமுற வேண்டியதில்லை. அங்குக் கீழ்சாதியினர் உயர்சாதியினருடன் பழகுவதில்லை.
Dia tidak sahaja dimaki hamun dengan kata-kata yang kesat, malah disisihkan daripada masyarakat sehingga dirinya dan orang-orang yang sekasta dengannya menjadi lebih hina daripada. (பக்கம் 219)
கடுஞ்சொற்களால் ஏசுவதுமின்றி அவனையும் அவன் சாதியினையும் ஒதுக்கிவிடுவர். மிருகங்களைப்போல இழிவுபடுத்திடுவர். 
Di negeri ini, orang daripada keturunan kasta tinggi, kasta Brahma memakai punul yang melintang di tubuh, tetapi dia tidak takut menyentuh orang itu.  (பக்கம் 219)
இந்நாட்டில் உயர்சாதி மக்களான பிராமணர்கள் பூணூல் அணிந்திருப்பர். ஆனால், இவர்களைத் தொடுவதற்கு அவன் அஞ்சுவதில்லை.
Dia boleh membeli barang daripada penjaja dengan memberikan wang dari  tangan ke tangan; tidak seperti seperti di negaranya, dia mesti meletakkan wang itu di suatu tempat dan penjaja itu akan menyiram wang itu dengan air sebelum diambil dan dimasukkan ke dalam petinya. (பக்கம் 219)
வணிகனிடமிருந்து பொருள் வாங்கும்போது கையாலேயே பணத்தைக் கொடுக்கலாம். அவன் நாட்டில் அவ்வாறில்லை. பணத்ததக் குறிப்பிட்ட ஓரிடத்தில் வைத்துவிட வேண்டும். பின்னர் வணிகன் அப்பணத்தின் மீது தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தபிறகு பெட்டிக்குள் போட்டான். 
Apatah pula lembu ialah binatang suci bagi orang Hindu; dan kalau binatang itu mati, seperti ibunya sendiri yang mati.  (பக்கம் 220)
இந்துக்கள் மாட்டினைப் புனிதமாக எண்ணுகின்றனர். அம்மிருகம் இறந்தால் தம் தாய் இறந்ததுபோல கருதுகின்றனர்.
Tidak makan tengah hari tidak mendatangkan masalah, asalkan dia dapat mengunyah sirihnya seperti lembu atau kambing memamah biak. (பக்கம் 224)
பகல் உணவு உண்ணாவிடில் சிக்கல் ஏதுமில்லை. ஆடு, மாடுகளைப்போல அசைபோடுவதற்கு வெற்றிலை கிடைத்தால் போதும்.
 
Setelah menjalani beberapa upacara yang meletihkan, maka pesta perkhawinan Maniam dan Malini pun berakhir. (பக்கம் 229)
சோர்வு ஏற்படுத்தும் சடங்குகளுக்குப் பின்னர் மணியம் மாலினி இருவரின் திருமணம் நிறைவுற்றது.
 
Dia gertak sahaja, orang kulit hitam ini tentu takut kecut. (பக்கம் 253)
அவன் (வெள்ளைக்காரன்) மிரட்டினால் போதும் இந்தக்ழன்) பயந்துவிடுவான்.
Suppiah menerpa ke hadapan dan sujud di kaki orang putih…… Lantas, dia menendang Suppiah. Suppiah terjungkir. (பக்கம் 256)
முன்னே வந்து வெள்ளக்காரன் காலில் விழுந்து கும்பிட்டான் சுப்பையா…… வெள்ளக்காரன் சுப்பையாவை எட்டி உதைத்ததால் அவன் சுருண்டு விழுந்தான்.
Dia berasa bangga kerana anjing orang putih itu jinak dengannya. (பக்கம் 276)
வெள்ளக்காரனின் நாய் தன்னுடன் சாதுவாகப் பழகுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
1900-ஆம் ஆண்டிலிருந்து நாடு விடுதலைப் பெற்றது வாயிலாக மலாய்க்காரர், தமிழர், சீனர் ஆகிய மூவினத்தாரிடயே நிலவிய தொடர்பினையும் ஒற்றுமையினையும் தெளிவுறுத்தும் நோக்கத்திற்காக இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அடிப்பட நோக்கம் அஃதன்று என்னும் உண்மையை மேற்காணும் குறிப்புகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஓர் இனத்தாரையும் அவர்கள் சார்ந்துள்ள பண்பாட்டினையும் இழிவு செய்வதற்கு இவ்வளவு போதாதா? இதற்கு என்ன சாக்குப்போக்குச் சொல்லவிருக்கின்றனர்? 
ஒற்றுமையே நம் வாழ்வு, நம் பண்பாடு, என முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் கல்வியகங்களில் எத்தகைய சிந்தனகள் புகுத்தப்பட வேண்டுமென்னும் தெளிவற்றிருக்கின்றோம். இது வியப்பிலும் வியப்பாக இருக்கின்றது.
ஒரு நூலைப் பள்ளிப்பாட நூலாகத் தேர்வு செய்வதற்கு எத்தனைத் தரப்பினர் எவ்வளவு காலம் உத்தேசித்திருக்க வேண்டுமென்னும் தெளிவு நமக்கு உண்டு. கல்வி அமைச்சர் முதற்கொண்டு பள்ளிப் பாடநூல் தேர்வுக்குழுவினர் வரையிலாக இதில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை அதிகாரிகள் இந்நாவலைப் படித்திருப்பர்? எத்தனனப் படிநிலைகளைத் தாண்டி இந்நாவல் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்நாவல் தேர்வு தொடர்பாக ஈடுபட்டிருந்தோருக்கு நாவலின் உள்ளடக்கம் தமிழர்களின் வாழ்வியலையும் மனதையும் பாதிக்குமெனத் தோன்றவில்லையா!

Monday, January 10, 2011

காதலிக்க நேரமில்லை .... !!!!!!!!!!

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் 
உன்னிடத்தில் கொண்டுவர தெரியவில்லை 
காதல் அதை சொல்லுகிற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு 
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் 
மரங்கள் கூடநடப்பது போல நினைத்துக்கொள்கிறேன் 
கடிதம் ஒன்றை கப்பல் செய்து மழையில் விடுகிறேன் 
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ 
உன் கனவினில் நினைவது யாரோ 
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ 
ஒரு பகலென சுடுவதும் ஏனோ 
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ .....
காதல் தர நெஞ்சு இங்கு காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரமில்லையா ???
இலையை போலே என் இதயம் தவறி விழுதே .....

Saturday, January 8, 2011

My Brilliant Sister .... Miss , Syalani Murugan

Syalani ...... I am really very proud to say she is my sister .....
About Syalani ....
Actullay i have to say thanx to Face Book for giving a lovely Sister to me

Syalani from Malaysia ....,Very brilliant , care taking person ,Very big Lord Shiva Devotee , my one of the best well wisher n then very good poet writer ...!!!!
Samples of syalu's poems follows ....,
1.
மரணத்தில் தான் சொர்கத்தைக் காணலாம் 
என்று எவன்சொன்னான்…?
மற்றவரை மகிழ்விக்கும்போதெல்லாம் நான் 
காண்கிறேனே சொர்கம்….
அன்போடு வாழ்ந்தால் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும்
சொர்கம் தான்…!
2.
உன்னுல்லம் முதலில் தூய்மை செய்…
இறையை என்றும் உன்னுல் வை…
உலகேயொரு காற்றடைத்த பை…
இங்கே நம்மை காக்குமே சிவனின் கை…
கவிதைக்கு அழகே நாம் சொல்லிடும் பொய்…
ஆனால், இறையே என்றும் இப்புவியில் மெய்..!

3.
இறப்பும் பிறப்பும் ஈசனின் பரிசுதான்;
இலப்பைப் ஏற்றிடும் போது வருதே வெருப்புதான்;
இறைவா…! வையம் காத்திட வாயேன்
எம் மக்கள் இன்பமாய் வாழ வழி செய்து போயேன்…!



More and more poems will be posted here in future....

Whats Happening In this Year 2011

I start this new year with very very memorable Sweet moment .....

Yes .... I meet one of my best friend Miss . Nadhikala form Sri Lanka .....

She give a sweet gift to me .... that is a beautiful Lord Krishna frame and one useful  book,  " FEELING GREAT "  I feel this books name means really what i feel when i was meet my dear friend Nadhi ...!!!!
Thanx a lot Nathi for giving this kind of wonderful day in my life ..... :)